காரைக்குடி: திமுக கூட்டணியில் எந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சி குறித்து பேசவில்லை என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”திமுக கூட்டணியில் எந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சி குறித்து பேசவில்லை. வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதிமுக, பாஜக கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பதே சந்தேகம்தான். அந்தல் கூட்டணியில் கீழ் மட்ட தொண்டர்கள் மட்டத்தில் ஒற்றுமை இல்லை.
நிர்பந்தத்தால் தான் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது. அந்தக் கூட்டணியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காவல் துறை சரியாக இருப்பதால்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர்” என்று எம்.பி நவாஸ்கனி கூறினார்.