• Tue. Jun 16th, 2026

24×7 Live News

Apdin News

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் இணையும் கட்சி குறித்து எழும் கேள்விகள்

Byadmin

Jun 16, 2026


ககோலி கோஷ் தஸ்திதார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தன்னுடன் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைவார்கள் என்று ககோலி கோஷ் தஸ்திதார் கூறியுள்ளார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கிளர்ச்சியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பலர் ஞாயிற்றுக்கிழமையன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் தங்களது பிரிவை இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தனர்.

“நாங்கள் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். நாங்கள் மக்களவை சபாநாயகரிடம் எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினோம்,” என்று ஓம் பிர்லாவை சந்தித்த பிறகு ககோலி கோஷ் தஸ்திதார் செய்தியாளர்களிடம் கூறினார்.

தஸ்திதார் மேலும் கூறுகையில், “நாங்கள் நாடாளுமன்றத்தில் தனி இருக்கை கோரியுள்ளோம், மேலும் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைகிறோம். எங்களிடம் 20 எம்பிக்கள் உள்ளனர், இது திரிணாமுல் காங்கிரஸின் 28 எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாகும். நாங்கள் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவோம்” என்றார்.

இதைத் தொடர்ந்து, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி குறித்து பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

By admin