• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

‘திருச்செந்தூர் கோவிலில் ஜிபே மூலம் ரூ.1000 பெற்ற அர்ச்சகர்’ – பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் ரமேஷ்

Byadmin

May 30, 2026


TVK, Minister, Ramesh, HR&CE, Thiruchendur

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களிடம் கேட்டறிந்த அமைச்சர்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் முக கவசம் அணிந்து ஆய்வு செய்ய சென்ற அறநிலையத்துறை அமைச்சர் தரப்பிடம் விரைவாக தரிசனம் செய்ய அழைத்து செல்வதாக கூறி பணம் வாங்கிய அர்ச்சகர் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் கோவிலில் தன்னார்வலராக வேலை செய்பவர் என்றும் அவர் கோவில் அர்ச்சகராக பணியாற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் நிறுவன ஒப்பந்த காவலர்கள் இருவர் பணியிலிருந்து விடுவிக்க இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் கையூட்டு பெற்ற முடியிறக்கும் பணியாளர்கள் இருவரின் தொழில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

TVK, Minister, Ramesh, HR&CE, Thiruchendur

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, திருச்செந்தூரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை ரமேஷ்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முக கவசம் அணிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

By admin