• Sun. Aug 2nd, 2026

24×7 Live News

Apdin News

திருப்பதி அரசியல் புயல்: பட்ஜெட் ஆவணம் கோவிலில் காணிக்கை போல எடுத்துச் சென்ற விவகாரம்

Byadmin

Aug 1, 2026


திருப்பதியில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை

திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் வரைவு நகலை கொண்டு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து தவெக அமைச்சரின், இந்த செயல் இணையத்தில் விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சு. வெங்கடேசன்

இதுகுறித்து முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “பட்ஜெட் ஆவணங்கள் கடவுளுக்குச் செய்யப்படும் காணிக்கைகளோ அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல.

அவை, பொதுப் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் அரசியலமைப்பு ஆவணங்கள். ஒரு தனிநபரின் சொந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்த அரசாங்க ஆவணங்களை வழங்குவது முறையற்றது,” என்று சு.வெங்கடேசன் கூறினார்.

By admin