• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

திருப்பதி லட்டு சர்ச்சை: திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் உரிமையாளர் சொல்வது என்ன?

Byadmin

Sep 22, 2024


திருப்பதி லட்டு சர்ச்சை: திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் உரிமையாளர் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருப்பதி லட்டு சர்ச்சையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வழங்கிய நெய்யில்தான் கலப்படம் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் அனுப்பிய நெய்யில் கலப்படம் விலங்குக் கொழுப்பு இருந்ததாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அந்நிறுவன அதிகாரிகளும் உரிமையாளரும் கூறுவது என்ன? திருப்பதி கோவிலுக்கு திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் எவ்வளவு காலம் நெய் வழங்கியது?

இதுகுறித்து கடந்த 19ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திருமலை திருப்பதியின் செயல் அதிகாரி சியாமள ராவ், “தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10 டேங்கர்களில் நெய் கொண்டு வரப்பட்டதாகவும், அதில் பயன்படுத்தப்பட்டது போக மீதமிருந்த 4 டேங்கர்களை சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் விலங்குக் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும்” தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டை திண்டுக்கல்லில் செயல்படும் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் மறுத்துள்ளார். இதுதொடர்பான ஆய்வக அறிக்கைகள் தேவஸ்தானத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin