• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

திருப்பதி லட்டு: தமிழ்நாட்டு நிறுவனத்தின் நெய்யில்தான் கலப்படமா? முழு விவரம்

Byadmin

Sep 21, 2024


திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திருமலை திருப்பதி

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக ஆந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட கருத்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் செயல் அதிகாரி சியாமள ராவ் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தில் நெய் அளவுக்கு அதிகமாக சேர்ப்பார்கள். இதற்கு முன்பு வனஸ்பதி மட்டுமே நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறிவந்த சியாமள ராவ், தற்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு இருந்தது உறுதியாகியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

ஆந்திர பிரதேசத்தில் புதிய ஆட்சி அமலுக்கு வந்தவுடன் சியாமள ராவ், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

“நான் இங்கு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல்வரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தின் தரம் குறித்து என்னிடம் குறிப்பிட்டார். அதன் பிறகு நான் அதில் கவனம் செலுத்த துவங்கினேன். அந்த சமயத்தில் திருப்பதிக்கு 5 தனியார் நிறுவனங்களிடமிருந்து நெய் வாங்கப்பட்டது. அவர்களிடம் நாங்கள் நெய்யின் தரம் குறித்து எச்சரிக்கை செய்த பிறகு நான்கு நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் தரத்தை மாற்றிக் கொண்டன. ஆனால் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் அவ்வாறு செய்யவில்லை. அதனை தொடர்ந்து நாங்கள் அந்த நிறுவனத்திடம் நெய் வாங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது சியாமள ராவ் கூறினார்.

By admin