• Tue. Nov 24th, 2026

24×7 Live News

Apdin News

‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சர்வே தூண்’ – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆய்வறிக்கை தாக்க

Byadmin

Nov 24, 2026


திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் சர்வே தூண்(GTS) அமைந்துள்ளதாக, தமிழ்நாடு அரசின் நில அளவைத் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் சர்வே தூண்(GTS) அமைந்துள்ளதாக, தமிழ்நாடு அரசின் நில அளவைத் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள 484 நில அளவைக் கற்கள் நேரில் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது’ என, அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அவை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பை அளப்பதற்காக அமைக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவைத் தூண்கள்’ எனவும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையின் உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது.

‘இதன் அருகில் உள்ள தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம்’ எனக் கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.

By admin