• Wed. Nov 25th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் அளித்த விளக்கம் என்ன?

Byadmin

Nov 25, 2026


திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே நேற்று(24-11-2026)  தீபம் ஏற்றப்பட்டது

படக்குறிப்பு, திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே நேற்று(24-11-2026) தீபம் ஏற்றப்பட்டது

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், ஆனால் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான நபர்களின் பெயர்களை கோவில் நிர்வாகம் வழங்கவில்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 24ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அன்றைய தினம் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே மகாதீபம் ஏற்றப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று (நவம்பர் 25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தகவலை சட்டச் செய்திகளை வெளியிடும் லைவ் லா இணையதளம் தெரிவித்துள்ளது.

By admin