• Wed. Nov 25th, 2026

24×7 Live News

Apdin News

உயிர் ஆயுதர்; உயர்வானவர் | ரேணுகா உதயகுமார்

Byadmin

Nov 25, 2026


அள்ளி அணைக்கவும் இல்லை
கொள்ளியும் வைக்கவில்லை
பெட்டியுள்ளும் நீங்கள் இல்லை
புதைகுழி உங்களுக்கில்லை
மண் அள்ளி போடவும் இல்லை
மலர்ப்படுக்கை அங்கு இல்லை
ஊர்வலமாய் வரும் பேழையில்
உங்கள் உடல் இருக்கவுமில்லை

வெடித்து சிதறிய வெளிச்சமாய்
கடித்து குதறிய உடலமாய்
கடலில் கருகிய கட்டையாய்
கை கால் முகமற்ற முண்டமாய்
சிதலமாகிய சதைகளாய்
சிவந்து கலந்த உப்புநீராய்
காற்றில் மணத்த மூச்சாய்
கந்தக கலவையின் மணமாய்
எத்தனை வகையாய்
இவர்களை கொடுத்தோம்
சத்தியம் செய்து
எதை உறுதி எடுத்தோம்
மறப்பதே எங்களின்
மரபென ஆனதால்
கிடைப்பதில் மகிழ்வதே
விடுதலை ஆனதோ

நெஞ்சாங் கூட்டினுள்
நினைவுகள் கனக்க
எங்கிருந்தாலும்
எங்களின் இதயம்
உங்களுக்காக துடிக்கும்

ரேணுகா உதயகுமார்

The post உயிர் ஆயுதர்; உயர்வானவர் | ரேணுகா உதயகுமார் appeared first on Vanakkam London.

By admin