• Thu. Aug 13th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம்: 17 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு வீட்டுக்கு மின்சார வசதி பெற்ற குடும்பம்

Byadmin

Aug 13, 2026


திருப்பரங்குன்றம், '17 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மின்சார இணைப்பு
படக்குறிப்பு, மின்சாரம் இன்றி பிள்ளைகள் தெரு விளக்கு வெளிச்சத்தில் வீதியில் அமர்ந்து படிப்பதாக நந்தினி கூறியிருந்தார்.

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பனையூர் ஊராட்சியின் திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் நந்தினி வேல்முருகன், தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) இது தொடர்பாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) அவருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

“விரைவில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு, நந்தினியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மதுரை மாவட்ட நிர்வாகம் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நந்தினியின் வீட்டிற்கு மேலே தாழ்வழுத்த மின்பாதை செல்வதால், அதை மாற்றி அமைக்க பங்களிப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, பணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், “40,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கேட்கிறார்கள், கூலி வேலைக்குச் செல்லும் என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது” என்று நந்தினி கூறியிருந்தார்.

By admin