• Thu. Aug 13th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Byadmin

Aug 13, 2026


தமிழ் சினிமாவில் சந்தை மதிப்புள்ள பிரபல நடிகரான அசோக் செல்வன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘அன்பில் அவன்’ எனும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.‌

ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி-  அசோக் செல்வன் – அபிநயா செல்வம்-  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டு வருகிறது . இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி நாயகன் அசோக் செல்வன் பேசுகையில், ” காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பதுதான் இப்படத்தின் மைய புள்ளி.

இரண்டரை ஆண்டுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கிறேன் இந்த இடைவெளி – அழகான காதல் கதைக்காக எடுத்துக்கொண்ட காலகட்டம்.

இந்தப் படம் பெண்களின் கனவுகளை பற்றி …அதை சாத்தியப்படுத்துவதற்காக அவர்களின் போராட்டத்தை பற்றி… உணர்வுபூர்வமாக பேசுகிறது” என்றார்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை ரசிகர்களை கவர்ந்திருப்பதுடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.

By admin