• Thu. Aug 13th, 2026

24×7 Live News

Apdin News

சுதந்திர தின விழாவில் யாரெல்லாம் கொடியேற்றலாம்? அந்த உரிமை யாருக்கு உள்ளது?

Byadmin

Aug 13, 2026


சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் உரிமை யாருக்கெல்லாம் உள்ளது? கவுன்சிலர்கள் கொடியேற்றுவது சரியா?

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி மாநகராட்சிப் பள்ளிகளில் மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்களை வைத்து தேசியக் கொடி ஏற்றுவதை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் கடந்த 29ஆம் தேதி மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அதிகாரிகள், கவுன்சிலர்கள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, சென்னை மாநகராட்சி துணை மேயர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொடியேற்றுவது மரபாகத் தொடர்கிறது. கவுன்சிலர்கள் கொடியேற்றுவதற்கு அனுமதி உள்ளதா?

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் 29ஆம் தேதியன்று நடைபெற்றது. அப்போது பேசிய மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், கவுன்சிலர்கள் கொடியேற்றுவது தொடர்பாகப் பேசினார்.

அவர் பேசும்போது, “ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தந்த வார்டுக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொடியேற்ற வேண்டும். இதை அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களும் மண்டல தலைவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.

By admin