• Fri. Aug 14th, 2026

24×7 Live News

Apdin News

டிஎன்பிஎல்: நெல்லை அணி வெற்றி பெற 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை

Byadmin

Aug 13, 2026


நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.

நெல்லை ராயல் கிங்ஸ்

இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 6 ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர் ராதாகிருஷ்ணன் 5 ரன்னில் அவுட்டானார்.

2-வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் லோகேஷ்வர்-பாலசுப்ரமணியன் சச்சின் ஜோடி 59 ரன்கள் சேர்த்த நிலையில் சுரேஷ் லோகேஷ்வர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய பாலசுப்பிரமணியன் 42 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஷாருக் கான் 29 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்துள்ளது.

நெல்லை அணி சார்பில் யுதீஸ்வரன் 3 விக்கெட்டும், இம்மானுவல் செரியன், சச்சின் ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

By admin