• Fri. Aug 14th, 2026

24×7 Live News

Apdin News

சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி ஏற்றப்போகும் விஜய் – இந்த உரிமை கிடைத்தது எப்படி?

Byadmin

Aug 14, 2026


சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமை கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருக்கும் இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றப் போகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் டெல்லியின் செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் தேசியக் கொடியேற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றுவதும் ஒரு வழக்கமான அரசு நிகழ்வாக உள்ளது.

ஆனால், 52 ஆண்டுகளுக்கு முன் மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஜார்ஜ் கோட்டையில் ஆளுநர் ஏற்றுவதே வழக்கமாக இருந்து வந்தது. அந்த மரபை மாற்றுவதற்கான கோரிக்கைகள் தமிழ்நாட்டில் இருந்துதான் எழுப்பப்பட்டன.

‘மாநில உரிமைகள்’ என்பது தமிழ்நாட்டின் அரசியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கவனம் பெறும் ஒரு கருத்தியல். அதன் ஒரு பகுதியாகவே 1974இல் இந்தியா முழுமைக்குமான ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது.

தமிழ்நாட்டில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகள்

கடந்த 1974ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சுதந்திர தினத்தன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியபோது, ஆளுநர்கள் கொடியேற்றும் வழக்கம் முதன்முதலாக மாற்றப்பட்டது. பின்னர் அதுவே புதிய மரபாக மாறி, சுதந்திர தினத்தன்று மாநிலங்களில், முதலமைச்சர்களே தேசியக் கொடியை ஏற்றும் நடைமுறை அமலுக்கு வந்தது.

By admin