• Thu. Aug 13th, 2026

24×7 Live News

Apdin News

தொகுதி மறுவரையறை தீர்மானம்: தவெக சாதிக்க நினைப்பது என்ன? அதன் அரசியல் தாக்கம் எப்படி இருக்கும்?

Byadmin

Aug 13, 2026


தொகுதி மறுவரையறை: தவெக அரசின் தீர்மானத்தை ஆதரித்த திமுக - அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், YouTube/Assembly

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் (ஆகஸ்ட் 12) முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது த.வெ.க அரசின் தீர்மானத்தால் என்ன நடக்கும்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை புதன்கிழமையன்று த.வெ.க அரசு கொண்டு வந்தது.

“நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். உறுப்பினர்களின் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

By admin