• Thu. Aug 13th, 2026

24×7 Live News

Apdin News

‘109 ஆண்டுகளுக்கு முன் ரூ.35000 பிரிட்டிஷாருக்கு கடன்’ – திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்

Byadmin

Aug 13, 2026


 ஜும்மலால் ருதியா

பட மூலாதாரம், Gautam Ruthiya

படக்குறிப்பு, அந்தக் குடும்பத்திடம் ஜும்மாலால் ருதியாவின் பழைய புகைப்படங்கள் உள்ளன, அதில் அவர் தனது காரோடு காணப்படுகிறார்.

    • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.

தற்போது, 109 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அக்குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜும்மாலால் ருதியாவின் குடும்பத்தினர், 1917ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி தேதியிடப்பட்ட சான்றிதழ் தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளனர். அதில், பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் செலுத்தப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகை போபால் ஏஜென்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அரசியல் முகவர் மூலம் வழங்கப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

தற்போது, இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் குடும்பத்தினர் குறித்த தகவல்களை வழங்குமாறு பிரிட்டனின் கடன் மேலாண்மை அலுவலகம் (டிஎம்ஓ) அந்தக் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளது.

By admin