• Wed. Jul 2nd, 2025

24×7 Live News

Apdin News

திருப்புவனம் மரணம் குறித்து சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் குடும்பத்தினர் கூறுவது என்ன?

Byadmin

Jul 1, 2025


சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு, லாக்-அப் மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெயராஜ் – பென்னிக்ஸ்

“ஐந்து ஆண்டுகளாகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் நாங்கள் உயிருடன் இருக்கும் வரை வேதனையைத் தரும்.”

இவை பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸின் வார்த்தைகள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் தந்தை – மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்து ஐந்தாண்டுகளாகி விட்டன. ஆனாலும், ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்த இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை, அவர்களது குடும்பத்தினர் நீதிக்காக காத்துக் கிடக்கின்றனர்.

இதனிடையே தான், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​ஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயி​ரிழந்​தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By admin