• Thu. Jul 31st, 2025

24×7 Live News

Apdin News

திருப்பூர்: பட்டியல் சாதி திருமணங்களுக்கு மண்டபங்கள் மறுக்கப்படுகிறதா? பிபிசி கள ஆய்வு

Byadmin

Jul 24, 2025


சிவன் மலையில் பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படும் திருமண மண்டபங்கள் – பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, சிவன் மலை பகுதியில் உள்ள மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கேயம் அருகே சிவன் மலையைச் சுற்றியுள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள், பட்டியலின மக்களுக்கு வாடகைக்குக் கொடுக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த உண்மையை அறிய வாடிக்கையாளர் போர்வையில் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

அப்போது, குறிப்பிட்ட சில திருமண மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படுவது உண்மை என்பதும், இந்தப் புகார் மீதான விசாரணைக்குப் பிறகு, சாதியின் அடிப்படையில் மண்டபம் வழங்க மறுப்பு தெரிவிக்காமல் வேறு காரணங்களைச் சொல்லி மறுப்பதும் தெரிய வந்தது.

இத்தகைய திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இதுகுறித்து காங்கேயம் வருவாய் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அந்த புகாரில் பகுதியளவு உண்மை இருப்பதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், இதுகுறித்து ஆட்சியரிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

By admin