• Tue. Jul 29th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பூர்: மரத்தில் தொங்கிய நிலையில் பட்டியலின தொழிலாளி சடலம் – சந்தேகம் எழுப்பும் அமைப்புகள்

Byadmin

Jul 24, 2025


தாராபுரம் பட்டியலின தொழிலாளி மரணம், முருகன் மரணம், தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் விசாரணை

பட மூலாதாரம், Vadivel Raman

படக்குறிப்பு, இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுயமாக முன் வந்து விசாரணை நடத்தியுள்ளது

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

எச்சரிக்கை: இதில் இடம் பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்

தாராபுரம் அருகில் சென்னக்கால்பாளையம் என்ற கிராமத்தில் கைகள் கட்டப்பட்டு, மரத்தில் தொங்கிய நிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்திருந்தார்.

இது கொலை என்று பல்வேறு பட்டியலின அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இது தற்கொலை என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் தற்கொலை என்றே உறுதி செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

By admin