• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

‘திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிகிறது’ – சென்னை காவல் ஆணையர் | Scientific investigation shows Naveen committed suicide Police Commissioner Arun informs

Byadmin

Jul 12, 2025


சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் கரு​வூல மேலா​ள​ராகப் பணியாற்றிய நவீனின் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரியவந்துள்ளது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், “நவீன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், நவீன் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை செய்துகொண்டதாகவே தெரிகிறது.

காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் நேரில் அழைத்து விசாரித்ததாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. மாதவரம் திருமலா பால் நிறு​வனத்​தின் சட்ட மேலா​ளர் சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில், தங்​கள் நிறுவன நிதிப்​பிரி​வின் கரு​வூல மேலா​ள​ரான நவீன் பொலினேனி சுமார் ரூ.44 கோடி மோசடி செய்​த​தாக புகார் அளித்​தார். அது தொடர்​பான ஆவணங்​கள் மற்​றும் வங்கி கணக்கு பட்​டியலை சமர்ப்​பிக்க அறி​வுறுத்​தினோம். அந்தப் புகார் மனு விசா​ரணை நிலை​யிலேயே உள்​ளது.

ரூ.44 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை துணை ஆணையர் விசாரித்திருக்க கூடாது. அது தவறு என்பதால்தான், பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் அவர் காவல்துறை மிரட்டல் விடுத்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாண்டியராஜனுக்கு நான் தான் விடுப்பு கொடுத்து அனுப்பினேன்” என்றார்.

நடந்தது என்ன? – திரு​மலா பால் நிறு​வனத்​தில் ரூ.40 கோடி கையாடல் விவ​காரத்​தில் சிக்​கிய மேலா​ளர் நவீன் நேற்று தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி(37). திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்​னை​யில் உள்ள திருமலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராகப் பணி​யாற்றி வந்​தார்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் திரு​மலா பால் நிறு​வனம் அவர்​களது நிறுவன வரவு-செலவு கணக்​கு​களை சரி​பார்த்து தணிக்கை செய்​துள்​ளது. அப்​போது, ரூ.40 கோடி முறை​கேடு நடை​பெற்​றிருப்​பது தெரிய​வந்​தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்​த​தாக​வும், அந்த பணத்தை அவரது குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பரின் வங்கி கணக்​குக்கு மாற்றி மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக​வும் குற்​றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்​பாக அந்​நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் நவீனை, நேரில் வரும்​படி கூறி போனில் அழைத்து விசா​ரித்​த​தாக​வும், அப்​போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடு​கிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம்’ என போலீ​ஸாரிடம் நவீன் கெஞ்சி கேட்​டு கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு, அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடமாகக் கிடந்​தார். தகவல் அறிந்து புழல் போலீ​ஸார் சம்பவ இடம் சென்​று, நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், போலீ​ஸாரின் விசாரணைக்கு பயந்து நவீன் தற்​கொலை செய்து கொண்​டா​ரா? அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்​டன​ரா? என்​பது குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, நவீனின் குடும்​பத்​தினர் கூறும்​போது, “நேற்று முன்​தினம் நவீனை பார்க்க அவருடன் பணிபுரிந்த ஊழியர்​கள் இரு​வர் வந்​தனர். பணத்தை திருப்பி கொடுத்து விட்​டால் மட்​டும் சும்மா விட்​டு​விடுவோம் என நினைக்க வேண்​டாம். உன்னை எப்​படி​யும் சிறை​யில் தள்ளி விடு​வோம் என்று மிரட்​டினர். அதே​போல், போலீஸாரும் கடும் நெருக்​கடி கொடுத்​த​தால் நவீன் இந்த முடிவை எடுத்​திருக்​கலாம்’’ என குற்​றம்​சாட்​டினர்.



By admin