• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

திருவள்ளூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபர் பிடிபட்டது எப்படி?

Byadmin

Jul 25, 2025


திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு வழக்கு, காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரைக் காவல்துறை இன்று (ஜூலை 25) கைது செய்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரைக் காண்பிக்குமாறு பொது மக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்துப் பேசிய வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், கைது செய்யப்பட்டுள்ள நபரின் அடையாளங்கள் தேடப்பட்ட நபருடன் பொருந்திப் போவதால் கைது செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். முப்பது வயது மதிக்கத்தக்க அந்த நபரிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 30க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபரைப் பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அது மட்டுமின்றி, தேடப்படும் நபரைப் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் இன்று காலையில் காவல்துறை அறிவித்திருந்தது.

By admin