• Fri. Jun 12th, 2026

24×7 Live News

Apdin News

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள்: பாரதிராஜா- இளையராஜா கூட்டணி பிரிந்தது ஏன்?

Byadmin

Jun 12, 2026


பாரதிராஜா- இளையராஜா கூட்டணி, தமிழ் சினிமா

பட மூலாதாரம், @offBharathiraja

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

1970களின் பிற்பகுதி மற்றும் 80கள் என்பது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காலகட்டம்.

“அப்போது தான் பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் அறிமுகமாகின்றனர். எம்ஜிஆர், சிவாஜி போன்ற நட்சத்திரங்களின் காலம் முடிவுற்ற நிலையில், அடுத்த உச்ச நாயகத் தகுதியை ரஜினியும் கமலும் 80-களில் அடைந்தனர். இவை அனைத்துக்கும் இளையராஜாவின் இசை முக்கிய காரணியாக இருந்தது” என ‘தமிழ் சினிமா- புனைவில் இயங்கும் சமூகம்’ நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.

“இளையராஜாவைக் கணக்கில் கொண்டே இசையையும் பாடல்களையும் கதையம்சமாகக் கொண்ட ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின” என்றும் அவர் எழுதியுள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் உருவான மிக முக்கியமான கூட்டணி என்பது பாரதிராஜா- இளையராஜா கூட்டணி.

ஆனால், திரைத்துறை அறிமுகத்துக்கு முன்பாகவே இந்தக் கூட்டணி இணைந்து பணியாற்றியது நாடகங்களில். அப்போது இவர்களுடன் பணியாற்றிய, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இது குறித்து ஒரு காணொளியில் நினைவுகூர்ந்திருப்பார்.

By admin