• Sun. May 10th, 2026

24×7 Live News

Apdin News

துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நேரடிப் போர் மூளும் அபாயம் உள்ளதா?

Byadmin

May 10, 2026


இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்துவான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்துவானும் சமீபத்திய ஆண்டுகளில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில், துருக்கி-இஸ்ரேல் இடையிலான உறவு, ராஜ்ஜீய ரீதியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில் இருந்து மாறி, தற்போது நேரடி ராணுவ மோதலின் விளிம்பிற்கு வந்துள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு இடையிலான ராணுவ மோதலுக்கான வாய்ப்பு இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஏப்ரல் 11 அன்று வெளியிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவில், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் இரானின் “பயங்கரவாத ஆட்சிக்கு” உதவுவதாகவும், “தனது சொந்த குர்திஷ் குடிமக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்வதாகவும்” குற்றம் சாட்டினார்.

“காஸாவில் 73,000 பாலத்தீனியர்களின் ரத்தம் படிந்த கைகளையும் முகங்களையும் பார்க்காமல், அவர்கள் நம் நாட்டின் மீது நம்முடைய குர்திஷ் சகோதரர்கள் மூலமாக வெட்கமின்றி குற்றம் சாட்டுகிறார்கள்” என்று ஏப்ரல் 15 அன்று துருக்கி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் எர்துவான் கூறினார்.

சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பிபிசி துருக்கி சேவையிடம் பேசிய நிபுணர்கள், துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்படும் அபாயம், “எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது” என்று கூறுகின்றனர்.

By admin