• Sat. Sep 26th, 2026

24×7 Live News

Apdin News

தூங்கிக் கொண்டிருக்கும்போது என் துணைவர் பாலியல் வன்புணர்வு செய்தார் என எனக்கு தெரியாது

Byadmin

Sep 26, 2026


அடெல் ஓவர்டனும்- ஸ்டீவன் யூடனும்

படக்குறிப்பு, 46 வயதான அடெல் ஓவர்டனும், 44 வயதான ஸ்டீவன் யூடனும் 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

“என்னைப் பொறுத்தவரை, அவர் செய்ததை ஒப்புக்கொள்வதற்கு முந்தைய நாள் வரை, எங்கள் உறவுதான் நான் கொண்டிருந்த உறவுகளிலேயே மிகச் சிறந்த உறவாக இருந்தது”.

அடெல் ஓவர்டனின் 13 ஆண்டுகால காதலரான ஸ்டீவன் யூடன், ஒரு சிறந்த துணையாகவே தோன்றினார்.

இருவரும் ஒரு ஜாம்பி திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு நிறைய பொதுவான விருப்பங்களும் இருந்தன.

யூடன் அன்பானவராகவும், கனிவானவராகவும் இருந்ததாகவும், ஓவர்டன் மாற்றுத்திறனாளியான போது அவரைப் பராமரிப்பதற்காக தனது வேலையைக்கூட விட்டு விட்டதாகவும் அவர் கூறுகிறார்.

“அவர் அற்புதமானவர். நான் அவரை ஆழமாக நேசித்தேன். இப்போதும் கொஞ்சம் நேசிப்பதாகவே நினைக்கிறேன்” என்று டெர்பியில் உள்ள தனது வீட்டில் சோஃபாவில் அமர்ந்தபடி ஓவர்டன் கூறுகிறார்.

By admin