• Sat. Sep 26th, 2026

24×7 Live News

Apdin News

பூம்புகார் பற்றிய 3 கட்ட கடலடி அகழாய்வுகளில் என்ன கிடைத்தது? ஆய்வாளர்கள் விளக்கம்

Byadmin

Sep 26, 2026


பூம்புகார் நகரம், தமிழக தொல்லியல் துறை, கடலடி அகழாய்வு

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ்நாடு தொல்லியல் துறையின் மூன்றாம் கட்ட கடலடி அகழாய்வு செப்டம்பர் 22ஆம் தேதி நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகனால் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த அகழாய்வில், 250க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் பூம்புகார் கடல் பகுதியில் இருந்து கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமான நிலப்பகுதி அகழாய்வுகளுடன் ஒப்பிடும்போது, சவால்கள் நிறைந்த இந்த கடலடி அகழாய்வு எப்படி நடத்தப்பட்டது? பூம்புகார் குறித்த கேள்விகளுக்கு தற்போது கிடைத்துள்ள தொல்லியல் பொருட்கள் மூலம் விடை கிடைக்குமா?

பூம்புகார் நகரம், தமிழக தொல்லியல் துறை, கடலடி அகழாய்வு
படக்குறிப்பு, மூன்றாம் கட்ட கடலடி அகழாய்வு செப்டம்பர் 22ஆம் தேதி நிறைவடைந்துள்ளது.

பூம்புகார்- பண்டைய துறைமுக நகரம்

தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு குறித்த விவாதங்களில் கீழடி போன்றே பண்டைய துறைமுக நகரமான பூம்புகாரும் இடம்பெறும்.

இந்தப் பூம்புகார் கி.மு. நான்காம் நூற்றாண்டில் செழிப்பான ஒரு துறைமுக நகரமாக இருந்தது என்றும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சோழர்களின் தலைநகரமாக இது விளங்கியது என்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

By admin