• Sat. Sep 26th, 2026

24×7 Live News

Apdin News

2 தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர் விஜய் பேசியது என்ன? திமுக, அதிமுக, இடதுசாரிகள் கூறியது என்ன?

Byadmin

Sep 26, 2026


தவெக மதுராந்தகம் வேட்பாளர் மரகதகம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்தார்.

தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்ததாகக் கூறிய அவர், தவெக ஆட்சி கலையும் என்ற திமுகவினரின் கனவு கலையும் என்று தெரிவித்தார்.

முதல்வர் விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்சி கலையும் என்ற திமுக கனவு கலையும் என்ற அவரது விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள திமுக, “அரசியல் புரிதல் இல்லாமல் முதலமைச்சர் பேசி வருகிறார், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளே இன்று எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் விரைவில் ஆட்சி கவிழும்” என்று கூறியுள்ளது.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடதுசாரி கட்சிகள், ‘ஆதாயம் தேடியே மரகதம் குமரவேல் தவெகவில் சேர்ந்துள்ளார். இதில் குதிரை பேரம் நடந்திருக்கிறதா என்பது ரகசியமாகவே உள்ளது.’ என்று விமர்சித்துள்ளனர்.

“கட்சிக்கு துரோகமிழைத்த மரகதம் குமரவேலுவுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று அதிமுக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இவர்கள் தவிர, நாம் தமிழர் கட்சியும் ஆளும் தவெக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

முதலமைச்சர் பேசியது என்ன?

தவெக மதுராந்தகம் வேட்பாளர் மரகதகம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்தார்.

படக்குறிப்பு, தவெக மதுராந்தகம் வேட்பாளர் மரகதகம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்தார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் தலைவர்கள் களத்தில் பிரசாரத்தை முன்னரே தொடங்கிவிட்டனர்.

By admin