• Sat. Sep 26th, 2026

24×7 Live News

Apdin News

ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காயம்: நியூசிலாந்து தொடரில் இருந்து விலகல்

Byadmin

Sep 26, 2026


ஹர்திக் பாண்டியாவுக்கு வலது காலின் கீழ்ப்பகுதியில் (shin) புதிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் உட்பட, குறைந்தது மூன்று வாரங்களுக்கு அவரால் போட்டி கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

பாண்டியா மீண்டும் விளையாட தொடங்குவதற்கான தேதி செப்டம்பர் 20 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப, அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ‘இந்தியா ஏ’ அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை:

“இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது; பாண்டியாவின் சமீபத்திய ஸ்கேன் அறிக்கைகள் அவரது வலது காலின் கீழ்ப்பகுதியில் காயம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அவருக்கு இரண்டு வாரங்கள் முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ.-இன் மருத்துவ குழு தலைவர் டாக்டர் தின்ஷா பர்திவாலா அவரது அறிக்கைகளை பார்வையிட்டுள்ளார்.

ஜப்பானில் இருந்து திரும்பியதும் அவர் பாண்டியாவை நேரில் பரிசோதித்து, எப்போது பயிற்சியை (rehabilitation) தொடங்கலாம் என்பது குறித்து முடிவெடுப்பார்,” என்று பி.சி.சி.ஐ.-இன் ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ (COE) செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பி.டி.ஐ.-இடம் தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்குகிறது, அதை தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதற்குள் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை.

காயம் இருப்பது தெரியவந்தது:

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக ஜப்பானுக்கு செல்லும் அணியுடன் பாண்டியாவையும் அழைத்து செல்ல பி.சி.சிஐ. விரும்பியதாகவும், அதற்கான விசா பணிகளுக்காக அவரது பஸ்போர்ட்-ஐ பி.சி.சி.ஐ.-இன் செயல்பாட்டு குழு பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், ஆப்கானிஸ்தான் டி20 தொடர் தொடங்குவதற்கு சற்று முன்பு, ஃபீல்டிங் பயிற்சியின் போது அவரது முழங்கால் பகுதியில் திடீர் கடுமையான வலி ஏற்பட்டது.

அவர் பயிற்சியில் இருந்து இடைவேளை எடுத்துக்கொண்டு சில நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்தார். ஆனால், உடல் தகுதி சான்றிதழ் பெறுவதற்கு தயாரான நிலையில், வலி ​​மீண்டும் ஏற்பட்டது; ஸ்கேன் பரிசோதனையில் காயம் இருப்பது தெரியவந்தது.

32 வயதான பாண்டியா, ஐ.பி.எல். தொடர் முடிந்ததில் இருந்து பெங்களூருவில் தங்கியுள்ளார். தற்போது ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

By admin