சீனாவுக்கு வருகை தருமாறு அழைப்பு:
இந்த ஆண்டில் இன்னும் இரண்டு சந்தர்ப்பங்களில் – சீனாவில் நடைபெறவுள்ள APEC உச்சிமாநாடு மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாடு ஆகியவற்றில் – டிரம்ப்-ஐ சந்திக்க ஆவலாக இருப்பதாக ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
“அதிபர் அவர்களையும், ஃபர்ஸ்ட் லேடியையும் (First Lady) சீனாவுக்கு வருகை தருமாறு நான் வரவேற்கிறேன்,” என்று வெள்ளை மாளிகையின் ‘ரெட் ரூம்’ அறையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜி ஜின்பிங் கூறினார்.
“சீனா-அமெரிக்க உறவு எனும் மாபெரும் கப்பலுக்கான பாதையை வகுக்கும் இருவரை போல அதிபரும் நானும் செயல்படுகிறோம். கடந்த மே மாதம் அதிபர் சீனாவுக்கு வருகை தந்தபோது, மூலோபாய ஸ்திரத்தன்மை கொண்ட ஆக்கபூர்வமான சீனா-அமெரிக்க உறவை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்,” என்று ஜி ஜின்பிங் கூறினார்.