• Sat. Jul 11th, 2026

24×7 Live News

Apdin News

தென் கொரியா: கோவிலில் டேட்டிங் செய்யும் இளைஞர்கள், காதலில் விழ உதவும் பௌத்த துறவிகள்

Byadmin

Jul 11, 2026


 தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள்

பட மூலாதாரம், BBC/ Hosu Lee

படக்குறிப்பு, அரசு ஆதரவு பெற்ற வரன் தேடும் நிகழ்ச்சியில், 1,600 பேரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நபர்கள், அன்றைய நிகழ்வுகளுக்காகப் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

    • எழுதியவர், ஜேக் க்வோன்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அடர் ஆரஞ்சு நிற உடையில் இருக்கும் ஒரு பௌத்த துறவி, தன் முன் இருக்கும் இளம் ஆண்கள், பெண்களைப் பார்த்து, அவர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இங்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்.

ஒரு துணையைத் தேடிக் கண்டுபிடித்து, ஒரு நாள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதே அந்த நோக்கம். அங்கு வந்திருப்பவர்கள் தங்களுக்கு அமையப் போகும் இணையைப் பார்த்தபடி, ஒருவித பதற்றத்துடன் சிரிக்கிறார்கள். இது ஏதோ புதிய பிரபலமான ரியாலிட்டி ஷோவின் தொடக்கம் அல்ல.

தென்கொரியாவின் பால்கோங்சன் மலையின் பசுமையான சூழலுக்கு நடுவில் அமைந்துள்ள, 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த கோவில் ஒன்றில் நடத்தப்படும் ஒரு நிஜ வாழ்க்கை டேட்டிங் முகாம் இது.

இந்த நிகழ்வு தொடர்ந்து 30 மணிநேரம் நடைபெறுகிறது. இதில் அடுத்தடுத்துப் பல செயல்பாடுகளும், தொடர்ச்சியான சில சங்கடமான தருணங்களும் இருக்கும். இவை அனைத்துமே அவர்களுக்குள் இருக்கும் தயக்கத்தை உடைத்து, காதலைக் கண்டறிவதற்காக செய்யப்படுகின்றன.

“நம் நாடு ஆபத்தில் இருக்கும்போதெல்லாம், பௌத்தர்கள்தான் எப்போதும் முதலில் களத்தில் இறங்கிச் செயல்பட்டு இருக்கிறார்கள்,” என்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யூ சியோல்-ஜூ கூறுகிறார்.

By admin