1
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய ஓகஸ்ட் 5ஆம் திகதி முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மேற்படி தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்படும். அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்.