• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது முதல் பிடிபட்டது வரை – காவல்துறை வெளியிட்ட புதிய தகவல்கள்

Byadmin

Oct 29, 2026


தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பித்த சம்பவம்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றது குறித்து, வழக்கின் புலனாய்வு அதிகாரியான ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி விஷ்ணுபிரியா செய்தியாளர்களிடம் விவரித்துள்ளார்.

கானாவிலக்கு காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறையில் இருந்து சம்பவம் நடந்த அன்று இரவு 10 மணியளவில் சிறைக் கைதிகள் தப்பிச் சென்றதாக சிறைத்துறையில் இருந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

இதையடுத்து, அனைத்து சோதனைச் சாவடிகளையும் அலெர்ட் செய்ததாகக் கூறிய அவர், “அடுத்த 15 நிமிடத்தில் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அங்கு 17 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது” என்கிறார்.

முதல் 24 மணிநேரத்தில் 13 பேரை கைது செய்துவிட்டதாகவும் 36 மணிநேரத்தில் தப்பிச் சென்ற 17 பேரையும் காவல்துறை கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகள் உள்ளன” என்கிறார் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா.



By admin