• Sun. Sep 29th, 2024

24×7 Live News

Apdin News

தேர்தல் பத்திரம்: நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு – பின்னணி என்ன?

Byadmin

Sep 28, 2024


நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புபுப் படம்)

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமலாக்க இயக்குநரகம் மீது பெங்களூரு சிறப்புப் பிரதிநிதிகள் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கைப் பதிவு செய்ய பெங்களூருவில் உள்ள சிறப்பு பிரதிநிதிகளுக்காக நியமிக்கப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் (ஜேஎஸ்பி) அமைப்பின் இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் உள்ளூர் காவல் நிலையத்தில் ஆதர்ஷ் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர் நீதிமன்றத்தை நாடினார்.

ஜேஎஸ்பி என்பது கல்வி உரிமைச் சட்டம் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பி வரும் ஓர் அமைப்பு.

By admin