• Sun. Oct 18th, 2026

24×7 Live News

Apdin News

தேவா காலமானார்: ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது என்ன? ஒரு பார்வை

Byadmin

Oct 17, 2026


தேவாவின் உடலுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

படக்குறிப்பு, தேவாவின் உடலுக்கு திரைத்துறையினரும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவாவின் மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாவின் உடலுக்கு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“ஐந்து தம்பிகள் உடன் இணைந்து தெருத்தெருவாக கச்சேரி செய்த தேவா வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்” என்று ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

“சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பு கொண்டவர் தேவா” என்று நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த தேவாவின் மெல்லிசை, பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன.” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

தேவா உடல் நாளை அவரது சொந்த ஊரான ஆற்காட்டில் அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில், அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

By admin