• Sun. Apr 19th, 2026

24×7 Live News

Apdin News

தொகுதி மறுசீரமைப்பு: ‘நிறைவேற்ற முடியாது’ என தெரிந்தும் அரசியல் சாசன திருத்த மசோதாவை பாஜக கொண்டு வந்தது ஏன்?

Byadmin

Apr 19, 2026


நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள், நீண்ட கால அடிப்படையில் அதற்கான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்,” என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமையன்று மக்களவையில் கூறினார்.

131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். இந்த பெரும்பான்மையை பெற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தவறிவிட்டது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும் எதிராக 230 பேரும் வாக்களித்தனர். இம்மசோதாவை நிறைவேற்ற குறைந்தது 352 வாக்குகளாவது வேண்டும்.

இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அதேசமயம் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543லிருந்து 850ஆக உயர்த்துவதையும் இந்த மசோதா அனுமதிக்கிறது.

ஆனால், இந்த மசோதா கொண்டு வரப்பட்ட நேரம் மற்றும் அரசின் நோக்கங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை குறைவாக இருக்கும் என தெரிந்தும் அரசு இம்மசோதாவை அறிமுகப்படுத்தியது ஏன்? இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதில் மத்திய அரசின் நோக்கம் என்ன?

By admin