இன்றைய பஞ்சாங்கம்
பராபவ ஆண்டு சித்திரை-6 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவிதியை நண்பகல் 1.32 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : பரணி காலை 9.26 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்
கார்த்திகை விரதம், மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீ பாலமுருகன் தங்கரதக் காட்சி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-வரவு
கடகம்-வெற்றி
சிம்மம்-சுபம்
கன்னி-லாபம்
துலாம்- நலம்
விருச்சிகம்-இரக்கம்
தனுசு- சுகம்
மகரம்-அமைதி
கும்பம்-உதவி
மீனம்-பண்பு