• Thu. Sep 24th, 2026

24×7 Live News

Apdin News

தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுடன் கரம் கோர்க்கும் ‘சிறை’ எல்.கே. அக்ஷய் குமார்

Byadmin

Sep 24, 2026


‘சிறை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் எல். கே. அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் எல். கே. அக்ஷய் குமார் – சுராஜ் வெஞ்சரமூடு – சேத்தன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். க்ரைம் த்ரில்லராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு எல். கே. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா பாரம்பரிய பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பட தயாரிப்பாளர்கள் டி. சிவா – தனஞ்செயன் – ஃபைவ் ஸ்டார் செந்தில் – ஃபைவ் ஸ்டார் கல்யாண் – அருண் விஷ்வா – சபரி – விஜய் – இயக்குநர்கள் ஹெச். வினோத் – ‘சிறுத்தை’ சிவா – ஆர். எஸ். துரை செந்தில்குமார் – சுரேஷ் ராஜகுமாரி – விக்னேஷ் வடிவேல் – ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் – ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்று, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான ‘சிறை’ படத்தைத் தொடர்ந்து… அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராவடி’ திரைப்படத்திலும் நடித்திருக்கும் நடிகர் எல். கே. அக்ஷய் குமார் மூன்றாவது முறையாக மீண்டும் அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்கத்தில் தயாராகும் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் நடிகர் ஜீவாவைத் தொடர்ந்து எல்.கே. அக்ஷய் குமாரும் இணைந்திருக்கிறார் என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin