• Thu. Sep 24th, 2026

24×7 Live News

Apdin News

’10 மாதங்களில் 14 ஆட்சேபனை’: தலைமைத் தேர்தல் ஆணையர் குறித்த புலனாய்வு அறிக்கை தகவலால் கொந்தளிப்பு

Byadmin

Sep 23, 2026


எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம், ஞானேஷ்குமார், எதிர்க்கட்சிகள் கண்டனம், இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வு அறிக்கை

பட மூலாதாரம், Sanjeev VermaHindustan Times via Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கடந்த சில மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழின் புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இந்திய அரசியல் களத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு முறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து “10 மாதங்களில் 14 ஆட்சேபனைகளை” இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்காமல் முடிவுகள் எடுக்கப்பட்டது முதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல், அத்துடன் “அனுமதியற்ற, சட்டவிரோத” நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குதல் வரை பல்வேறு விவகாரங்கள் இந்த ஆட்சேபனைகளில் அடங்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) பிகாரில் ஜூன் 2025-ல் தொடங்கியது; 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரைவு வாக்காளர் பட்டியல்களிலிருந்து 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் இச்செயல்முறைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதன் மூலம் பதிலளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேள்விகளை எழுப்பி வருகின்றன.

By admin