• Wed. Sep 23rd, 2026

24×7 Live News

Apdin News

சர்வதேச அளவில் இரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தோஷ் நாராயணன்

Byadmin

Sep 23, 2026


தமிழ் திரையிசை உலகில் தனித்துவமான பாணியுடன் வெற்றி நடை போடும் இசைக் கலைஞர் சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான பாடல்கள் நெட்ஃப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியான திரைப்படத்தில் இடம் பிடித்து சர்வதேச அளவிலான இரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சுயாதீன இசை வீடியோ ஆல்பமான ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘மாமதுர’ ஆகிய இரண்டு பாடல்கள் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ எனும் திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது.

இதன் மூலம் தமிழ் அல்லாத மொழியில் தயாரான திரைப்படத்தில் தமிழ்ப் பாடல்கள் இடம்பெற்றிருப்பது… சந்தோஷ் நாராயணனின் இசைத்திறமை பல எல்லைகளைக் கடந்து சர்வதேச அளவில் பிரத்யேக கவனத்தைப் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக ‘என்ஜாய் எஞ்சாமி’ எனும் பாடல் – தமிழ் கிராமிய இசையின் வடிவத்தை நவீனத்துவமான பாணியில் அணுகியிருப்பது இசை ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு தமிழ் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் சமூக ஊடகங்களின் ஊடாக தெரிவித்து வருகிறார்கள்.

By admin