• Wed. Jul 2nd, 2025

24×7 Live News

Apdin News

தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு அமல்: அமைச்சர் சிவசங்கர் விளக்கம் | Minister Sivasankar explains about Electricity tariff hike

Byadmin

Jul 2, 2025


சென்னை: தமிழகத்​தில் தொழில், வணிக நிறு​வனங்​களுக்​கான மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​தது. தமிழக மின்சார ஒழுங்​கு​முறை ஆணைய உத்​தர​வுப்​படி, தமிழகத்​தில் வீட்டு மின்​நுகர்​வோரைத் தவிர தொழிற்​சாலை, வணிக நிறுவனங்கள் உள்​ளிட்ட அனைத்து பிரிவு​களுக்​கும் மின் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களில் உள்ள லிஃப்ட், உடற்​ப​யிற்​சிக் கூடம் போன்​றவற்றை உள்​ளடக்​கிய பொது சேவை பிரிவுக்கு யூனிட் ரூ.8.55-இல் இருந்து ரூ.8.80-ஆக உயர்த்​தப்​பட்டு உள்​ளது. குடிசை தொழில், குறுந்​தொழில்​களுக்​கு, 500 யூனிட் வரை யூனிட் ரூ.4.80-ல் இருந்து ரூ.4.95-ஆக​வும்; 500 யூனிட்​டுக்கு மேல் ரூ.6.95-ல் ரூ.7.15-ஆக​வும் அதி​கரித்​துள்​ளது. விசைத்​தறிக்கு 500 யூனிட் வரை ரூ.6.95-ல் இருந்து ரூ.7.15-ஆக​ அதி​கரித்​துள்​ளது.

தொழிற்​சாலைகள், தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களுக்கு யூனிட்​டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.8.25-ஆக உயர்த்​தப்​பட்டு உள்​ளது. தற்​காலிக மின் இணைப்பு கட்​ட​ணம் யூனிட்​டுக்கு ரூ.12.85-ல் இருந்து ரூ.13.25-ஆக உயர்ந்​துள்​ளது. மின்​கட்டண உயர்வு குறித்து அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் வீடு​கள் உட்பட 2.83 கோடி நுகர்​வோருக்கு மின்​கட்டண உயர்வு இல்​லை. இதனால் அரசுக்கு ஆண்​டுக்கு ரூ.520 கோடி கூடு​தல் செல​வாகும்.

இந்த தொகையை மின் வாரியத்​துக்கு அரசு வழங்​கும். அதன்​படி, 100 யூனிட் இலவச மின்​சார சலுகை தொடரும். இரு மாதங்​களுக்கு 500 யூனிட் வரை பயன்​படுத்​தும் சிறு வணிக மின்​நுகர்​வோர், 50 கி.​வா. வரை ஒப்​பந்த பளு கொண்ட தாழ்​வழுத்த தொழிற்​சாலைகள், குடிசை மற்​றும் குறுந்​தொழில்​கள் உள்​ளிட்​ட​வற்​றுக்கு உயர்த்​தப்​பட்ட கட்​ட​ணத்தை அரசே மானிய​மாக வாரி​யத்​துக்கு வழங்​கும். விசைத்​தறி நுகர்​வோருக்கு 1,000 யூனிட் வரை இலவச மின்​சா​ரம் தொடர்ந்து வழங்​கப்​படும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.



addtoany_content_bottom">

By admin