• Thu. Apr 23rd, 2026

24×7 Live News

Apdin News

நகர்ப்புற வெப்பத் தீவு: கிராமத்தை விட நகரத்தில் இரவில் ஏன் அதிக வெப்பம்? ஆபத்தும் தீர்வும் என்ன?

Byadmin

Apr 23, 2026


வெயில், கோடைகாலங்கள், காலநிலை மாற்றம், வானிலை, சுற்றுச்சூழல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிராமப்புறங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை போன்ற பெருநகரங்களில் இரவில் அதீத வெப்பநிலை நிலவுகிறது.

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோடை காலங்களில் இருக்கும் மிகப்பெரிய கவலை, ‘பகல் நேரத்தில் அடிக்கும் கடுமையான வெயிலை எப்படிச் சமாளிப்பது?’ என்பதே.

அந்தக் கடுமையான வெயிலைச் சமாளித்து, பொழுது சாய்கையில் வீட்டை அடைந்துவிட்டால் போதும் என்ற மனநிலை தான் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும்.

ஆனால், வெப்பத்தின் பாதிப்பு இரவு நேரங்களிலும் அதிகமாக இருக்கிறது. அதிலும், கிராமப்புறங்களுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் இரவில் அதீத வெப்பநிலை நிலவுகிறது என்றும், அதனால் சில உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம் என்பதையும் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நகர்ப்புற வெப்பத் தீவு

‘நகர்ப்புற வெப்பத் தீவு’ (Urban heat island) விளைவு என்பது, சுற்றியுள்ள கிராமப்புறங்களை விட நகரங்கள் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் ஒரு நிகழ்வாகும்.

‘2050-ஆம் ஆண்டில் மனிதகுலத்தில் கிட்டத்தட்ட 70% பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்பதால், ‘நகர்ப்புற வெப்பத் தீவு’ விளைவுகளைத் தணிப்பதற்கான வழிகளைக் கண்டறிவது மிகவும் அவசியம்’ என அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

By admin