• Thu. Jul 10th, 2025

24×7 Live News

Apdin News

நடிகர் கே ஜே ஆர் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

Byadmin

Jul 9, 2025


தயாரிப்பாளராக இருந்து நடிகராக அறிமுகமான கே ஜே ஆர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா  சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ரீகன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கே ஜே ஆர், அர்ஜுன் அசோகன், ஸ்ரீ தேவி, சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் குமார், பிருத்வி ராஜ், இந்துமதி, அஜூ வர்கீஸ், ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் பி. வி. சங்கர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் தயாரிக்கிறார்.

நடிகர் கே ஜே ஆர் நடித்திருக்கும் ‘அங்கீகாரம்’ படத்திற்கு பிறகு அவர் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

By admin