நடிகர் சாய்ரா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹலோ மிஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சாய்ரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹலோ மிஸ்’ திரைப்படத்தில் சாய்ரா, புதுமுக நடிகை பிஸ்மி, கே. எஸ். ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜ், ஜானகி சுரேஷ், கு. ஞானசம்பந்தன், பால ஹாசன், கே பி வை சரத், சுவாமிநாதன், சத்யன், மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரின்ஸ் ஜோர்ஜ் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். குமார்லால் நேரு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று, இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில்… இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
பாடசாலையில் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியை மீது மாணவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பின் பின்னணியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
The post நடிகர் சாய்ரா நடிக்கும் ‘ஹலோ மிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Vanakkam London.