• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் ‘சியான்’ விக்ரம் நடிக்கும் :’பவர் ஹவுஸ்’ படத்தின் டைட்டிலுக்கான அறிமுக காணொளி வெளியீடு

Byadmin

Sep 16, 2026


சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய நட்சத்திர நடிகரான ‘சியான்’ விக்ரம் கதையின் நாயகனாக அதிரடியான எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பவர் ஹவுஸ்’ என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பவர் ஹவுஸ்’ திரைப்படத்தில் விக்ரம், சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, ஊர்வசி, விடிவி கணேஷ், எம். எஸ். பாஸ்கர், சுபாஷ் செல்வம், விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் வழங்குகிறார்.

இப்படத்திற்கான அறிமுக காணொளியில் உணவை தயாரித்து விருந்தோம்பலுக்காக பாவிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக சியான் விக்ரம் தோன்றுவதும்… அவருடைய உணவு தயாரிக்கும் கூடத்தில் நடைபெறும் கலகலப்பான காட்சிகளுடன் எக்சன் காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால்… படத்தை பற்றிய எதிர்பார்ப்பை இந்த காணொளி ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் சியான் விக்ரமின் தோற்றமும்… ஏனைய கதாபாத்திரங்களின் வடிவமைப்பும்… கொமர்சல் என்டெய்னர் என்பதை உறுதிப்படுத்துவதால்.. படத்தை வெள்ளித்திரையில் காண அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

By admin