1
முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் ‘இம்மாற்றல்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி வரும் ‘இம்மாற்றல்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கயாடு லோகர் , டி எம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகக இருக்கும் இந்த திரைப்படத்தை ஏகே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘காட்டு மல்லி பெண் தானே ..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் ஷாலி சி எழுத, பின்னணி பாடகர் சாம் சி எஸ் மற்றும் பின்னணி பாடகி ரேஷ்மா ஷியாம் ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். சாம் சி எஸ்ஸின் வித்தியாசமான மெல்லிசையாக தயாராகி இருக்கும் இந்த பாடல்.. அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.