• Wed. Jun 24th, 2026

24×7 Live News

Apdin News

கூடலூர்: வீட்டு வாசலுக்கு வரும் யானைகள்; அதிகரிக்கும் மரணங்கள் – மக்கள் கூறுவது என்ன?

Byadmin

Jun 24, 2026


நீலகிரி, கூடலூர், யானை - மனித மோதல்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

”சாயங்காலம் ஐந்தரை மணிக்கு வீட்டுக்கு வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தேன். ‘யானை யானை’ என்று கத்தினார்கள். நான் எழுந்து வீட்டுக்குள் ஓடுவதற்குள் என் முன்னால் வந்துவிட்டது. வேகமாக வீட்டுக்குள் ஓடியதில் கதவில் கை இடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஒரு நொடிதான்…உயிர் போயிருக்கும்!”

தேயிலைத் தோட்டத் தொழிலாளி சுகந்தி, தலையில் வைத்திருந்த தேயிலைச்சுமையுடன் பிபிசியிடம் பகிர்ந்த வார்த்தைகள் இவை.

”சில தினங்களுக்கு முன்பு 10 யானைகள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டன. மாலை 3 மணிக்கு வந்த யானைகள், காலை 7 மணிக்குதான் இங்கிருந்து கிளம்பின. அதுவரை வீட்டை விட்டு வெளியே வரவே முடியவில்லை.”

தன்னுடைய சமீபத்திய அனுபவத்தை விவரித்தார் குழிவயல் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மினி.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் யானை–மனித மோதலும், அதனால் ஏற்படும் மனித உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தொடரும் மனித உயிரிழப்புகளால், வனத்துறைக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன.

By admin