1
‘ லப்பர்பந்து ‘படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் டி எஸ் கே கதையின் நாயகனாக நடிக்கும் ‘ டியர் ஜீவா’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதலா காதலா: எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பிரகாஷ் வி. பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டியர் ஜீவா’ எனும் திரைப்படத்தில் டி எஸ் கே – மனிஷா ஜஷ்னானி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தி காம்ரேட்ஸ் பிலிம்ஸ் மற்றும் செல் வைட்லீ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜே. சகாயா சதீஷ் மற்றும் உமர் முக்தார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ இந்த காலை பிடிக்கிறதே.. இந்த சாலை தூரம் செல்கிறதே…’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் பிரகாஷ் பி. பாஸ்கர் எழுத, பின்னணி பாடகரும் , இசையமைப்பாளருமான ரஷாந்த் அர்வின் மற்றும் பின்னணி பாடகி தீபிகா தியாகராஜன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். காதல் உணர்வும், மெல்லிசையும் ஒன்றிணைந்திருக்கும் இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.