0
பான் இந்திய நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘கிங்டம்’ படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியான புதிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ கிங்டம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்ய ஸ்ரீ போர்சே மற்றும் சத்ய தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கிரீஷ் கங்காதரன் மற்றும் ஜோமோன் டி. ஜோன் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
ஸ்பை எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் – ஃபோர்ச்சுன் ஃபோர் கிரியேஷன்ஸ் – ஸ்ரீ கரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக தயாராகி, இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ஏற்கனவே மூன்று முறை வெளியானது. இந்த ஆண்டு மார்ச் மாதம் – மே மாதம் – ஜூலை நான்காம் திகதி என அறிவிப்பு வெளியானது.
ஆனால் எதிர்பாராத காரணத்தால் திட்டமிட்ட திகதியில் வெளியாகவில்லை. தற்போது இந்த திரைப்படம் எதிர்வரும் 31 ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியான புதிய காணொளி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.