0
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் பிணை கோரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று (03) நடைபெற்றது.
இதன்போது இருவருக்கும் பிணை வழங்க பொலிஸார் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனையடுத்து நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தரப்பில் வாதிடப்பட்டது.
பொலிஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக நடிகர் கிருஷ்ணா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்தி: ஸ்ரீகாந்தால் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா!
விசாரணையைத் தொடர்ந்து குறித்த இரு மனுக்கள் மீதான வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.