‘டோரதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரவீண் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.
நீதிமன்றத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளின் விவாதத்தின் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்- ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
The post நவம்பரில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ appeared first on Vanakkam London.