• Tue. Jul 22nd, 2025

24×7 Live News

Apdin News

நாகம்: தமிழ்நாட்டில் வீட்டிற்குள் நுழையும் பாம்புகளை பிடிக்க புதிய செயலி அறிமுகம் – எவ்வாறு செயல்படும்?

Byadmin

Jul 22, 2025


தமிழ்நாடு, பாம்புக்கடி, பாம்பு மீட்பு, வனத்துறை, நாகம் செயலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் இந்தியாவில் பாம்புக்கடியால் தமிழகம்தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறது.

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

பாம்பு என்றால் அஞ்சாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உங்கள் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்தால் உடனடியாக அவற்றை மீட்பதற்கு செயலி இருந்தால் எவ்வாறு இருக்கும்?

தமிழ்நாடு வனத்துறை அத்தகைய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. ஓலா, ஊபர் போல உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியால் பாம்பு மீட்பாளர்களையும் துரிதமாக தொடர்பு கொள்ள முடியும்.

தமிழகத்தில் பாம்புகளிடமிருந்து மக்களையும், மக்களிடமிருந்து பாம்புகளையும் காப்பாற்றும் வகையில், பாம்பு மீட்பாளர்களை ஒருங்கிணைக்கும் ‘நாகம்’ மொபைல் செயலியை தமிழக வனத்துறை அறிமுகம் செய்துள்ளது.

மக்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்குள் பாம்புகள் வரும்போது, இதில் பாம்பு மீட்பாளர்களை உடனே அழைக்க முடியும்.

By admin